கடலூர் மாவட்ட செய்திகள் |
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்: மாணவர் கைது Posted: 26 Nov 2011 04:14 AM PST சிதம்பரம்: சிதம்பரத்தில் பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறில் மாணவரை கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 22). இவர் சிதம்பரம் முத்தையா நகரில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜாகீர் என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அஜய்குமார் தான் தங்கி இருந்த அறையில் இருந்தார்., அப்போது அங்கு வந்த ஜாகீர் மற்றும் தன்னுடன் படிக்கும் நண்பர்களான சிவகங்கை மாவட்டம் வெள்ளை குளத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் அனீஸ், ஜெகன், சிவா ஆகியோருடன் வந்தார். பின்னர் அஜய்குமாரை ஜாகீர் உள்பட 5 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாங்கள் தங்கி இருந்த அறையில் கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் தடியாலும், வயர் பூட்டாலும் அஜய்குமாரை தாக்கினர். இதுபோல இரவு முழுவதும் தாக்கி சித்ரவதை செய்தனர். இன்று காலை அவர்களிடம் இருந்து தப்பி வந்த அஜய்குமார் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். ஜாகீர் உள்பட 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அண்ணாமலை நகரில் பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு Posted: 26 Nov 2011 02:30 AM PST கடலூர்: நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 5000 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் 2500 கனஅடியும், வெள்ளாற்றில் 2500 கனஅடி நீரும் விடுவிக்கப்படுகிறது. இத்துடன், மணவாய்க்காலில் வரும் 14 ஆயிரம் கன அடி நீரும் சேர்ந்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் பழைய கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment