கடலூர் மாவட்ட செய்திகள் |
| கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் Posted: 01 Dec 2011 09:13 PM PST உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையட்டி கடலூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். அப்போது, அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 36 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வழங்கி பேசினார். கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். எச்.ஐ.வி. பரவக் கூடிய விதங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.ரத்தப்பரிசோதனை செய்த பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். |
| சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: கடலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் கடைகள் அடைப்பு Posted: 30 Nov 2011 10:20 PM PST கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர். இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டுகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதுபோல் இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்டிக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள கடலூர் லாரன்ஸ் ரோட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலையே வெறிச்சோடி கிடந்தது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதுபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள், மருந்து கடைகள் மட்டும் இயங்கின. விழுப்புரம் புதிய பஸ்நிலைய பகுதிகளில் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளியூர் பயணிகள் அவதி அடைந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணை நல்லூர் பகுதிகளிலும் அனைத்த கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழு அளவில் இயங்கினாலும் கடையடைப்பு காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. |
| You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment