கடலூர் மாவட்ட செய்திகள் |
- கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டி பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வரவேற்பு
- சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 2 லட்சத்திற்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா
- திட்டக்குடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வகுப்புகள் துவக்க விழா
- திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
| கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டி பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வரவேற்பு Posted: 05 Dec 2011 03:11 AM PST கடலூர்: கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கடலூர் இசைப்பள்ளியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து கலைபண்பாட்டு மையம் மண்டல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைகளை வெளிக்கொண்டு வர, அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறது. மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்க கலைப்போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.நடனப்போட்டி: பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குரலிசைப்போட்டி: கர்நாடக இசை, தேசியப்பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி, நாட்டுப்புறப் பாடல்களை பாட வேண்டும்.ஓவியப்போட்டி: 40க்கு 30 செ.மீ., அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்ட்டிங் என எந்த வகையிலும் ஓவியங்கள் அமையலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப்போட்டியில் சவகர் சிறுவர் மன்ற செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் படிப்புச் சான்றிதழ்களுடன் கடலூர் புதுப்பாளையம், மாவட்ட இசைப்பள்ளியை அணுகவும். |
| Posted: 05 Dec 2011 03:06 AM PST சிதம்பரம்: சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. நந்தனார் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சச்சிதானந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் முன்னிலை வகித்தார். அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் மணிரத்தினம், டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் பங்கேற்க உள்ள மாணவிகள் தேன்குழலி, பாண்டிச்செல்வி ஆகியோருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் உட்பட 2 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகை வழங்கினார். டாக்டர் சங்கர், சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு குழு செயலர் இளங்கோ, ஓய்வு பெற்ற ஆசிரியர் மணிவேல், கிள்ளை பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி, அறக்கட்டளை செயலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆண்கள் பள்ளியிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |
| திட்டக்குடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வகுப்புகள் துவக்க விழா Posted: 05 Dec 2011 03:01 AM PST திட்டக்குடி: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வகுப்புகள் துவக்க விழா மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா திட்டக்குடியில் நடந்தது. திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை தலைமை தாங்கினார். தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முருகேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சண்முகம், கருணாநிதி, கண்ணன், இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் லெனின் நன்றி கூறினார். |
| திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது Posted: 03 Dec 2011 11:01 PM PST திட்டக்குடி: திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலத்தை ஒன்றிய குழுத்தலைவர் பார்வையிட்டார். திட்டக்குடியை அடுத்துள்ள நிதிநத்தம் ஓடையில் பெறுமுளை சிறுமுளை குமாரை வேப்பூர் உட்பட 20 கிராமங்களை இணைக்கும் ஓடைப்பாலம் ஒன்று உள்ளது இந்தபாலம் வழியாக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள திட்டக்குடி வந்து செல்லவும் விவசாய பொருட்களை எடுத்து வரவும் பயன் படுத்தி வந்தனர் இந்நிலையில் கடந்த 1992-ல் பெய்த கனமழை காரணமாக நிதிநத்தம் ஓடைப்பாலம் உடைந்து பாலத்தின் ஒரு பகுதி ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் திட்டக்குடியில் இருந்து நிதிநத்தம் வழியாக வேப்பூர் வரை சென்ற அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தற்போதும் பெய்த கனமழைகாரணமாக இந்தபாலம் முழுமையாக சேதமடைந்தது.இதனால் விவசாயிகள் மாணவர்கள் கிராமமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாயிடம் முறையிட்டனர் அதன் பேரில் கே.பி.கந்தசாமி அந்த ஓடையை நேரில் பார்வையிட்டார். இதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நபார்டு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் விவாதிக்கப்பட்டது. ஓடைப்பாலத்தை கட்டு வதற்கு மட்டும 30 லட்சம் ரூபாயும் நிதிநத்தம் இணைப்பு சாலையை (3 கிமி) புதுப்பிக்க 20 லட்சம் ரூபாயும் தேவைப்படுவதாய் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளப்பாதிப்பு காரணமாக ஓடைபாலம் சேதம் அடைந்துள்ளதால் குறிப்பிட்ட நிதியை மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பேரில் வெள்ளப்பாதிப்பு நிதியில் இருந்து பெறுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. மேலும் நபார்டு நிதி பெற்று குறிப்பிட்ட பணியை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாமியிடம் அந்தபகுதியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து அவரிடம் முறையிட்டனர் அப்போது அவர் கிராமமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். அவருடன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்னக்கிளிகுனசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தியாகராஜன், பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், ஒன்றிய அதிமுக துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியம், ஊராட்சி செயலாளர்கள் தங்கவேல், முத்துராமன், அண்ணா தொழில் சங்க மாவட்டத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். |
| You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment