கடலூர் மாவட்ட செய்திகள் |
- கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடக்கம்
- தமிழகத்தில் மார்ச் 8, 2012 ல் பிளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்: தேர்வு கால அட்டவணை விபரம்
- சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி
- நெய்வேலியில் 637 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
- மங்களூரில் மஞ்சள் பயிர்காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்
| கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடக்கம் Posted: 16 Dec 2011 01:31 AM PST கடலூர்: கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள், இந்நாள் மாணவர்கள் அனைவரும் நமது கல்லூரியின் இணையத்தளத்தினை பார்த்து தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும். பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பெரியார் கலைக் கல்லூரியின் இணையதள குழு முகவரி பெரியார் கலைக் கல்லூரி முகநூல் முகவரி |
| தமிழகத்தில் மார்ச் 8, 2012 ல் பிளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்: தேர்வு கால அட்டவணை விபரம் Posted: 16 Dec 2011 01:29 AM PST தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை மார்ச் 8-மொழித்தாள் ஒன்று. மார்ச் 9-மொழித்தாள் இரண்டு. மார்ச் 12-ஆங்கிலம் முதல் தாள். மார்ச் 13-ஆங்கிலம் இரண்டாம் தாள். மார்ச் 16- இயற்பியல்,பொருளியல்,உளவியல். மார்ச் 19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன். மார்ச் 20-வணிகவியல்,புவியியல்,மனையியல். மார்ச் 22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து. மார்ச் 26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிகக் கணிதம். மார்ச் 28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி. மார்ச் 30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல். |
| சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி Posted: 16 Dec 2011 01:11 AM PST வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. |
| நெய்வேலியில் 637 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா Posted: 15 Dec 2011 01:15 AM PST நெய்வேலி: தமிழக அரசின் சார்பில் மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்விழா நெய்வேலி நிலக்கரி நிறுவன பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு 637 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மணிமொழி வரவேற்றார். நிலக்கரி நிறுவன பள்ளிகளின் முதன்மை மேலாளர் சுந்தரராஜன் வாழ்த்தி பேசினார். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ரஞ்சிதாவிற்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கி வாழ்த்தினார். மண்டல அளவில் நடந்த தடகள போட்டிகளில் முதல் இடம் பெற்ற டினா மற்றும் முத்தமிழ்ச்செல்விக்கு பதக்கமும், பரிசுகளையும் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வழங்கினார். விழாவை வேதியியல் ஆசிரியர் பாலகுருநாதன் தொகுத்தளித்தார். விழாவில் அ.தி.முக. நகர செயலாளர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளர் இராம.உதயகுமார், தலைவர் அபு. பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி செயலாளர் அப்துல்லா, நகர அவைத்தலைவர் ராமலிங்கம், சட்மன்ற தொகுதியின் இணைச்செயலாளர் பழனிமுத்து மற்றும் ராஜகோபால், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வராஜ், தர்மராஜன், பூபதி, ராஜசேகரன், சின்னசாமி, மனோகர், விஜயன், இளங்கோவன், கஞ்சமலை ஆகியோர் கலந்து கொண்டார்கள். முடிவில் உதவி தலைமை ஆசிரியை மங்கையர்கரசி நன்றி கூறினார். |
| மங்களூரில் மஞ்சள் பயிர்காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 15 Dec 2011 01:13 AM PST திட்டக்குடி: வேளாண்மை தோட்டக்கலைத்துறை சார்பில் மங்களூரில் மஞ்சள் பயிர்காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பயிர் காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியது:- காப்பீடு திட்டம் நடைமுறை படுத்தப்படும் பகுதியில் அரசு மஞ்சள்பயிரை அறுவடை பரிசோதனை செய்து கடந்த 5 ஆண்டின் சராசரி மகசூலுடன் ஒப்பிட்டு நடப்பாண்டு மகசூல் குறைவாக இருக்கும் பட்சத்தில்எவ்வளவு குறைவு ஏற்பட்டதோ அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும். விவசாயிகள் 1 ஏக்கர் மஞ்சள்பயிருக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 34 ஆயிரத்து 332 ரூபாய் வரை காப்பீடு செய்யலாம். இதற்கு 1 ஏக்கருக்கு வங்கிகள் மூலம் சிறுகுறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் அரசு வழங்கும் மான்யம் 50 சதவீதம் போக ரூபாய் 12 ஆயிரத்து 85 ரூபாய் கட்ட வேண்டும் கடன்பெறாத சிறு-குறு விவசாயிகள் அரசு வழங்கும் 55 சதவீதம் மான்யம் போக 10 ஆயிரத்து 847 ரூபாய் கட்டவேண்டும். விவசாயிகள் சொந்தவிருப்பத்தின் அடிப்படையில் தாங்கள் காப்பீடு செய்ய விரும்பும் தொகையில் 5.55 சதவீதம் கணக்கிட்டு அதில் மேற்கண்ட விவரப்படி 50 சதவீதம் அரசு மான்யம் போக மீதித்தொகையை கூட்டுறவு வங்கி அல்லது தாங்கள் செயல்படும் வங்கிகளில் பயிர் செய்ததற்கான சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து தொகையை செலுத்தலாம். மஞ்சள் பயிர் காப்பிடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி தேதியாகும். இவ்வாறு ராமச்சந்தின் பேசினார். முகாமில் ஊராட்சி மன்றத்தலைவர் புதூர் பெரியசாமி, உழவர் மன்றத் தலைவாகள் ரவிச்சநதிரன், காமராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உதயசூரியன், கோவிந்தராஜ், செல்வக்குமார், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
| You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment