Tuesday, 20 December 2011

முகப்பு: அமைச்சரவை மாற்றம்...?!

முகப்பு
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
அமைச்சரவை மாற்றம்...?!
Dec 20th 2011, 12:46

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தனது  உடன்பிறவா சகோதரி என்று அடைமொழி கொடுத்து அழைக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 14 நபர்களை அ.இ.அ.தி.மு.க-விலிருந்து நீக்கி உள்ள நிலையில் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. சிதம்பரம், முட்லூர்,  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

பலவித அனுமானங்கள் இறக்கை கட்டி தமிழக அரசியல் வானில் உலா வரும் இவ்வேளையில், அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் இருக்கும் என்றும் தெரிகிறது, சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலரின்  பதவி பறிக்கப்படும், மீண்டும் சிலருக்கு அமைச்சரவையில் இடமுண்டு  என்றும் தமிழக அளவில் பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மாற்றப்படுவார்கள் என்றும் தெரிய வருகிறது.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment