
புதுடில்லி: "அகிம்சை வழியில் நடப்பதாகக் கூறும் அன்னா ஹசாரே, என் மீது நடந்த தாக்குதலை நியாயப்படுத்தியதன் மூலம் காந்தியக் கொள்கைக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார்' என, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் சரத் பவார், டில்லியில் கடந்த மாதம் 24ம் தேதி இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, சீக்கிய இளைஞர் ஒருவர், அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஹசாரே குறிப்பிடுகையில், "பவாருக்கு ஒரு அறை மட்டும் தான் விழுந்ததா?' என்று கேட்டு, தவறு செய்யும் அரசியல்வாதிகளை அடிப்பது வன்முறையாகாது ...


No comments:
Post a Comment