கடலூர் மாவட்ட செய்திகள் |
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை Posted: 23 Nov 2011 10:23 PM PST ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாக கடலூர்: வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடலூர் மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 20 அடி உயரம் வரை அலைகள் எழும்பி ஆர்ப்பரிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடல் நீரோட்டம் பெரிதும் மாறியுள்ளது என்றும் தெரிவித்தனர். கடந்த 3 நாள்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல வில்லை. 20 முதல் 30 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெரிய விசைப் படகுகளும் செவ்வாய்க்கிழமை கரை திரும்பின. இதுகுறித்து மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கிய பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடந்த 3 நாள்களாக கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. வியாழக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்தி மீன்கள் பிடிக்கும் 100 படகுகள் மற்றும் வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் பிடிக்கும் கட்டுவலைப் படகுகளும் கடந்த 3 மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்போது ஏற்பட்டு இருக்கும் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிறிய படகுகளும் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. |
You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment