Thursday, 24 November 2011

11/25 Dinamalar.com |நவம்பர் 25,2011

     
    Dinamalar.com |நவம்பர் 25,2011    
   
வாயை கொடுத்து வம்பில் மாட்டிய ஹசாரே
November 25, 2011 at 12:09 AM
 

ராலேகான் சித்தி: சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று தானே வாயைக் கொடுத்து, வம்பில் மாட்டிக் கொண்டார். சரத் பவாரை அடித்தது குறித்து அவர் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் சரத் பவார் நேற்று டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, அவரை சீக்கிய வாலிபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து கருத்து கேட்க, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் உள்ள ஹசாரேயின் வீட்டில், நிருபர்கள் குவிந்தனர். சரத் பவார் தாக்கப்பட்டது குறித்து, அவரிடம் சிலர் தெரிவித்தனர். உடன் ஹசாரே, "சரத் பவாரை வாலிபர் அடித்தாரா? ஒரே ஒரு அடி தான் ...


   
   
மாஜி அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் சோதனை
November 25, 2011 at 12:09 AM
 

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்குச் சொந்தமான, சென்னை, வேலூரில் உள்ள வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று அதிரடியாக நுழைந்து,சோதனை நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், அன்பரசன் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், நேற்று பொதுப்பணி, சட்டத்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தினர். ...


   
   
மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
November 25, 2011 at 12:09 AM
 

புதுடில்லி: டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர். "ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' என, ஆவேசத்துடன் குரல் எழுப்பி, கத்தியை காட்டியும் மிரட்டினார். மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், டில்லி பார்லிமென்ட் வீதியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, போலீசார் யாரும் இல்லை. தனியார் பாதுகாப்பு ஏஜன்சியைச் சேர்ந்த ...


   
   
பஸ் கட்டண உயர்வால் மின் ரயில்களில் பயணிகள் அதிகரிப்பு
November 25, 2011 at 12:09 AM
 

சென்னை: பஸ் கட்டண உயர்வால், புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் போக்குவரத்து 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கூட்டம் அதிகம் உள்ளதால், காலை, மாலை வேளைகளில், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என்று, பயணிகள் கூறுகின்றனர். பஸ் கட்டண உயர்வால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை பீச்-தாம்பரம்-செங்கல்பட்டு திருமால்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், மற்ற புறநகர் மின்சார ரயில்களைவிட, கூட்டம் அதிகம் உள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, ...


   
   
திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா கனிமொழி?
November 25, 2011 at 12:09 AM
 

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி காரணமாக, கைது செய்யப்பட்டு ஆறு மாதமாக, திகார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமின் மனு, டில்லி ஐகோர்ட்டில், இன்று விசாரணைக்கு வருகிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தங்கள் ஜாமின் மனுவையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என, டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி வி.கே.ஷாலி முன், நேற்று ...


   
   
குன்னூர் மக்களை அச்சுறுத்திய "மரண அறிக்கை' துண்டு பிரசுரம்
November 25, 2011 at 12:09 AM
 

குன்னூர்: குன்னூர் நகரின் பல இடங்களில் "மரண அறிக்கை' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பரசுராம் தெரு; நேற்று காலை 6.00 மணிக்கு வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள், வீடுகளின் சுவர், தடுப்புச்சுவர் உட்பட ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தை படித்து, அதிர்ச்சியில் உறைந்தனர். "மரண அறிக்கை' என்ற தலைப்பில் "குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது' என்ற முகப்புரையுடன் துவங்கிய அந்த துண்டு பிரசுரத்தில், அனுப்புனர் முகவரி, "கருட புராண நிர்வாகிகள், எமலோகம்' எனவும், பெறுநர் ...


   
   
ஊழல் வழக்கிலிருந்து விடுபட காஞ்சியில் வழிபட்ட "மாஜி' முதல்வர்
November 25, 2011 at 12:09 AM
 

காஞ்சிபுரம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள், வழக்கிலிருந்து விடுபடுவதற்காக, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வழிபடுவது தொடர்கிறது. ஆதர்ஷ் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை இழந்த, முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான், நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தினார். காஞ்சிபுரத்தில், காந்தி ரோட்டில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில், சமீபகாலமாக, அரசியல்வாதிகள் மத்தியில் புகழ்பெற்று வருகிறது. இக்கோவிலில், 16 வாரங்கள், 16 விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத ...


   
   
"டேம் 999' திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை
November 25, 2011 at 12:09 AM
 

சென்னை: முல்லை பெரியாறு அணை குறித்த, "டேம் 999' திரைப்படத்தை, தமிழகத்தில் திரையிட, அரசு தடை விதித்துள்ளது. "டேம் 999' திரைப்படம், முல்லை பெரியாறு அணை உடைவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்தது. "தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால், பொதுமக்கள் அச்சப்படுவர்; சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்' என, தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கருத்து தெரிவித்தனர். நேற்று முன்தினம், பார்லிமென்டிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. தமிழக சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கமும், தடை விதித்தது. இந்த நிலையில், "டேம் 999' திரைப்படத்தை வெளியிட, தமிழக ...


   
   
"சும்மா' இருக்க நினைச்ச என்னை பேச வைச்சுட்டாங்க: விஜயகாந்த்
November 25, 2011 at 12:09 AM
 

சென்னை: ""அ.தி.மு.க., ஆட்சியைப் பற்றி ஆறு மாதம் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றேன்; அதற்குள்ளாக, மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி, என்னை பேச வைத்து விட்டனர். ஆட்சிக்கு எதிராக பேசினால், என்னை சிறையில் போடுவர். நான் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன். நான் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கும் கேரக்டர் என்பதால், மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவேன்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில், மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சென்னை கோயம்பேடு ...


   
   
விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடக்குமா ?
November 24, 2011 at 4:09 PM
 

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் 3 வது நாளாக இன்றும் முடங்கியது. எதிர்கட்சிகள் விலைவாசி உயர்வு , பணவீக்கம், கறுப்பு பணம், தெலுங்கானா, உ . பி., மாநிலம் 4 ஆக பிரிப்பு , 2 ஜி ஊழல் விகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சியினர் தொடர்ந்து பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டு வரகின்றனர். அரசும் இது தொடர்பான விவாதத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறது. கடந்த 22 ம் தேதி துவங்கி இன்றுவரை எந்தவொரு பணியும் நடக்கவில்லை. நடப்பு கூட்ட தொடரில் லோக்பால் மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா, ...


   
   
'2ஜி' ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு கோர்ட் அனுமதி
November 24, 2011 at 6:15 AM
 

புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஐந்து பேருக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, கனிமொழிக்கும் விரைவில் ஜாமின் கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், அவர்களின் ஜாமின் மனுவை, விரைவான விசாரணைக்கு பட்டியலிடும்படி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில் 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜா கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தி.மு.க., எம்.பி., கனிமொழி ...


   
   
தனியார் பள்ளி: ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்
November 24, 2011 at 1:37 AM
 

தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அனைவரும், இச்சலுகையைப் பெறலாம்.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம், நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கலாம்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ...


   
   
உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
November 24, 2011 at 1:37 AM
 

சென்னை : ""முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக மக்களின் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரைச் சந்தித்து ஏற்கனவே உள்ள முல்லை பெரியாற்றின் மீது இன்னொரு அணை கட்டப்படுவது குறித்து விவாதித்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டு பிப்., 27ல், சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட ஆணையின்படி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியாக உயர்ந்துள்ளது. ...


   
   
திருமழிசை அருகே துணை நகரம் சாத்தியமா? நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்
November 24, 2011 at 12:28 AM
 

சென்னை: திருமழிசை அருகே, 311.05 ஏக்கர் நிலப் பரப்பில், சென்னைக்கு துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை பெற, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களுடன், டிசம்பர் 5ம் தேதி அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இது ஒருபுறம் நடக்க, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அங்குள்ள செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உள்ளூர் மக்கள் எதிர்ப்பு:கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., அரசால் ...


   
   
தாசில்தாரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,: அடுத்தடுத்த சர்ச்சையால் கட்சியினர் அதிர்ச்சி
November 24, 2011 at 12:12 AM
 

தொகுதியில் இருந்து அனுப்பி வைக்கும், முதியோர் உதவித்தொகை மனுக்களை கையெழுத்திட்டு பரிந்துரை செய்யுமாறு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை, சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் மிரட்டிச் சென்றதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்ட ஜெ., பேரவை நிர்வாகியாகவும், கடந்த ஆட்சியில், மாநகராட்சி எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர் வெங்கடாசலம். சட்டசபை தேர்தலில், பல்வேறு தரப்பினர் சீட் கேட்டு தலைமையை அணுகியபோதும், அதிர்ஷ்டவசமாக மேற்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு ...


   
   
தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்
November 24, 2011 at 12:12 AM
 

தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அனைவரும், இச்சலுகையைப் பெறலாம்.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம், நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கலாம்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ...


   
   
கூடங்குளம் அணு உலை போராட்டம் நாட்டுக்கு எதிரானது
November 24, 2011 at 12:12 AM
 

இந்தியா ஒரு வளரும் நாடு. நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அடித்தளம். இன்று இந்தியா, உலகில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வல்லமை பெற்று விளங்குவது, நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியான சூழ்நிலை, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வலுவான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி போன்றவை தேவைப்படுகின்றன.இந்திய அணுசக்தித் துறையை நேரு, 1953ல் உருவாக்கி, அதன் தலைவராக டாக்டர் ஹோமிபாபாவை நியமித்தார். இந்தியாவின் முதல் அணு உலை, "சைரஸ்' 1960ல் ஆரம்பிக்கப்பட்டு, பின் கல்பாக்கம், தாராப்பூர், ராஜஸ்தான் என ...


   
   
உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
November 24, 2011 at 12:12 AM
 

சென்னை : ""முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக மக்களின் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரைச் சந்தித்து ஏற்கனவே உள்ள முல்லை பெரியாற்றின் மீது இன்னொரு அணை கட்டப்படுவது குறித்து விவாதித்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டு பிப்., 27ல், சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட ஆணையின்படி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியாக உயர்ந்துள்ளது. ...


   
   
அமைச்சர்கள் பாக்கெட்டிற்கு போகிறது மத்திய அரசு நிதி: ராகுல் புகார்
November 24, 2011 at 12:12 AM
 

பாரெய்ச் (உ.பி.,):""உ.பி., முதல்வர் மாயாவதியும், முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவும், பெரிய தலைவர்களான பின், மக்களை மறந்து விட்டனர். அவர்களின் கஷ்டங்களை இவர்கள் உணர்வதில்லை. பல்வேறு திட்டங்களின் கீழ், உ.பி., மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியெல்லாம், அமைச்சர்களின் பாக்கெட்டிற்கு செல்கிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறினார்.உத்தர பிரதேச மாநிலத்தில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்., பொதுச் செயலர் ராகுல், இரண்டாவது நாளான நேற்று, பாரெய்ச் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:காங்., தலைமையிலான அரசு, நிலம் ...


   
   
அ.தி.மு.க.,வின் திடீர் நெருக்கம்: தமிழக பா.ஜ.,வுக்கு சிக்கல்
November 24, 2011 at 12:12 AM
 

"மத்தியில் சிநேகம்; மாநிலத்தில் அன்னியம்' என்ற பாணியில் அ.தி.மு.க., செயல்படுவதால், அவர்களோடு பழகுவதா, விலகுவதா எனத் தெரியாமல் தமிழக பா.ஜ.,வினர் திணறுகின்றனர்.லோக்சபா தேர்தல் 2014ல் தான் வரப்போகிறது. அப்போதைய கூட்டணி நிலைமையை இப்போதே கணிப்பது கடினம் தான். ஆனாலும், அதை இலக்காக வைத்து தான் அத்தனை கட்சிகளும் அடியெடுத்து வைக்கின்றன. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணிகள் மாறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.கழற்றிவிடப்படும் காங்.,: இன்றைய நிலவரப்படி, எதிர்வரும் லோக்சபா தேர்தலில், இரு முக்கிய திராவிடக் கட்சிகளாலும் காங்கிரஸ் தனித்து விடப்படும். ...


   
   
"2ஜி' ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் �
November 24, 2011 at 12:12 AM
 

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஐந்து பேருக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, கனிமொழிக்கும் விரைவில் ஜாமின் கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், அவர்களின் ஜாமின் மனுவை, விரைவான விசாரணைக்கு பட்டியலிடும்படி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில் 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜா கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தி.மு.க., எம்.பி., கனிமொழி ...


   
     
 
This email was sent to sozhaganesan@gmail.com.
Delivered by Feed My Inbox
PO Box 682532 Franklin, TN 37068
Create Account
Unsubscribe Here Feed My Inbox
 
     

No comments:

Post a Comment