கடலூர் மாவட்ட செய்திகள் |
- “தானே” புயல் சின்னம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
- வெளிநாட்டு வேலை: சவூதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை
- தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்
| “தானே” புயல் சின்னம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை Posted: 28 Dec 2011 08:56 PM PST கடலூர்: கடலூரில் 2-வது நாளாக நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. சுனாமி நினைவு நாளான திங்கட்கிழமை கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதியில் தஞ்சம்புகுந்தனர். துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் "தானே" புயல் உருவாகியுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் இன்று ராட்சத அலைகள் எழும்பின. தாழங்குடா பகுதியில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதையடுத்து 2-வது நாளாக நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. துறை முகத்தின் கரையோரத்தில் படகுகள் தொடர்ந்து ஓய்வெடுப்பதை காண முடிந்தது. சுனாமிதினம் உள்பட 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்தது. இதனால் மீன்விலை அதிகரித்தது. |
| வெளிநாட்டு வேலை: சவூதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை Posted: 28 Dec 2011 08:45 PM PST எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது. அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில் இருதய சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற 3 ஆண்டு பணியனுபவம் பெற்ற 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள், கன்சல்ட்டுகள், பி.எஸ்.சி நர்சிங் படித்த 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, மும்பை, காஷ்மீர், ஐதராபாத் போன்ற மாநகரங்களில் நேர்காணல் நடத்தப்படும். அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இப்பணியை வழங்கவுள்ளதால் அதிகப்படியான சம்பளம், சலுகைகள் கிடைக்கும், வெளிநாட்டு வாழ்பவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கும் என குறிப்பிட்ட அரசு குறிப்பு. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கம் 48, முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை - 600020 என்ற முகவரியில் இயங்கிவரும், அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கத்திற்கு வரும் 4ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். அல்லது, http://www.omcmanpower.com/vacancies.htm என்ற இணையத்தளத்தில் பதிவும் செய்யலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது. |
| Posted: 28 Dec 2011 08:40 PM PST தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும், ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் "2012" என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி சனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது. அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும். குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment