Thursday, 29 December 2011

கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்ட செய்திகள்


தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்கள் நியமனம்

Posted: 29 Dec 2011 08:55 PM PST

           தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6,872 பட்டதாரி ஆசிரியர்களும் 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிவிப்பு:

            ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித்தொகை அளிப்பது, இலவச சைக்கிள் வழங்குவது, லேப்-டாப் கொடுப்பது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

6 ஆயிரத்து 872 பணியிடங்கள்: 

             மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டுமென்றால், தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:40 என்ற விகிதாசாரப்படி நடப்புக் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 ஆயிரத்து 752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும் கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

              இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.181.36 கோடி செலவாகும்.மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதப்படி கூடுதலாக ஆயிரத்து 590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.45.25 கோடி செலவாகும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 ஆயிரத்து 137 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்கள் 1988 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1988 ஜூன் 1-ம் தேதிக்குப் பின் பணி புரிந்த பணிக்காலத்துடன் சேர்க்கப்படும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு ரூ.24.25 கோடி செலவாகும்.

கல்லூரி பேராசிரியர்கள்: 

          அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக நடப்பு கல்வியாண்டுக்கு ஆயிரத்து 661 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவாகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Cyclone Thane at 130 kmph to cross near Cuddalore, Puducherry

Posted: 29 Dec 2011 08:28 PM PST

Cuddalore 


               Cyclone Thane, packing wind speed of 130 kmph, was expected to cross the coast between Cuddalore in Tamil Nadu and Puducherry around 9 am on Friday, officials of the Indian Meteorological Department (IMD) here said."The cyclone is in the process of crossing between Cuddalore and Puducherry coast. The wind speed is around 130 kmph at Puducherry and Cuddalore. Waves measuring 1.5 metres height are hitting the shoreline," an IMD official told IANS.

          At 2 am the cyclone moved closer to about 90 km east of Puducherry, 125 km south-southeast of Chennai, IMD said. According to IMD, even after landfall the system is likely to maintain its intensity for 12 hours and weaken gradually. Rainfall at most places with heavy to very heavy falls was expected in northern Tamil Nadu and Pudducherry. The Tamil Nadu government has set up 20 teams to monitor the water levels in lakes and other water bodies in Chennai, Thiruvallur and other places. Eight teams of National Disaster Management Force have been sent to the coastal districts. Authorities in Tamil Nadu and Puducherry are on high alert to manage the emerging situation.

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

Posted: 29 Dec 2011 08:26 PM PST

கடலூர் :
 
            கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் 26 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்து ம் கூறியது:
 
 
         சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கடலூரில் முதல் முறையாக நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மீதுகட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் எஸ்.பி., அறையில் இவற்றை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரில் நடக்கும் மறியல்,போராட்டங்களை கண்காணிக்கலாம். மேலும் வன்முறை சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யும் வசதியுள் ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை கண்காணித்து, குற்றவாளியை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும்.
 
                தானே புயல் நாளை (இன்று) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன மீட்பு கருவிகளுடன், கடலூரில் 1000 போலீசார், விழுப்புரத்தில் 1500 போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1000 போலீசார் என மொத்தம் 4500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 64 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு தெரிவித்தார். எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., வனிதா உடனிருந்தனர்.

புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?

Posted: 29 Dec 2011 08:13 PM PST

               சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

          இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுட வருகின்றன.

            கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலை, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.  2011ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது.

              இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது. இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஏமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன












தானே புயல் காரணமாக சிதம்பரம் - கடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன

Posted: 29 Dec 2011 08:10 PM PST

சிதம்பரம்:
 
        தானே புயல் காரணமாக சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தானே புயல்: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Posted: 29 Dec 2011 02:49 AM PST

கடலூர்:
 
         தானே புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.
 
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கூறியது: 
 
          கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரைகளில் வசிக்கும் மக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தங்களது குடிசைகளுக்குள் தங்காமல், பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். 
 
 புயல் பாதுகாப்பு மையங்கள்:
 
                  20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம்: உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் உயர்வு

Posted: 28 Dec 2011 10:21 PM PST


கடல் சீற்றம் காரணமாக அலைகளால் தாழங்குடாவில் சேதமடைந்தத் தென்னந்தோப்பு. (உள்படம்) கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரம்.
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3-வது நாளாக, கடல் சீற்றம் நீடித்தது. கடலில் அலைகள்  அதிக உயரத்தில் எழுந்து ஆர்ப்பரித்ததால் கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் புதன்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

              படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். கடலூர் சில்வர் பீச் தொடர்ந்து கடல் நீரில் மூழ்கிக் கிடந்தது. கடற்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கடற்கரையில் இருந்த மீனவர்களின் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து இருந்தது. 

                கடலோரப் பகுதிகளான தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்டக் கிராமங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் சவுக்குத் தோப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கானத் தென்னை மற்றும் சவுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கடல் இரைச்சல் அதிகமாக இருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மாவட்ட மீன் அங்காடிகளில் மீன் வரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.


















முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 28 Dec 2011 10:12 PM PST

சிதம்பரம்:
 
           முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
 
                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுக்கும் கேரள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க வேண்டும் என கோஷமிட்டனர். கலை, அறிவியல், பொறியியல், இசைத்துறை மாணவ, மாணவிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 
 
            இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: 
 
                 கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தாலுக்கா ஆட்டோ ஒட்டுநர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு சங்கத்தினர், கார் ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகரில் ஆட்டோ மற்றும் வாடகைக் கார்கள் இயங்காததால் நகரில் போக்குவரத்து குறைவாகக் காணப்பட்டது.

30 coconut trees uprooted in the coastal area of Thazanguda in Cuddalore

Posted: 28 Dec 2011 08:29 PM PST

CUDDALORE:

      Thirty coconut trees were uprooted due to soil erosion in the coastal area of Thazanguda in Cuddalore on Wednesday. Due to the imminent cyclone, continuous strong waves had been eroding the soil. As a result, the trees fell. Rough sea and heavy waves were also caused havoc in the coastal hamlets and many fishermen said during high tide, water entered their villages.

       The eighth level cyclone warning was issued at Cuddalore port late on Wednesday. Boats had been docked at the fishing port for the fourth consecutive day.Port office source said heavy rains were expected from Thursday and the cyclone would cross Cuddalore and Nellore on Friday morning. Fisheries department had issued warning to fishing hamlets asking them to be on alert. Meanwhile, the coastline near Puducherry also experienced heavy wind and strong waves that lashed the shores.

7th Tsunami anniversary: Sea water enters villages in cuddalore District

Posted: 26 Dec 2011 08:32 PM PST

CUDDALORE:

        Sea water entered about 10 fishing hamlets in Cuddalore late on Monday, the seventh anniversary of the tsunami, creating panic among the people living there. With formation of low pressure over the Bay of Bengal, the sea was rough with strong waves. A cyclone-warning signal has been hoisted at the Cuddalore port. People in the fishing hamlets such as Devanampattinam, Thazanguda, Singarathope and Akkaraikori started panicking as the shore was submerged in sea water entirely. Fishermen who anchored their boats on the shore started shifting them to safer places. They also pulled back a few small boats using ropes to prevent them from being dragged into the sea by the waves.

கொத்தமல்லி (தனியா) சாகுபடி முறைகள்

Posted: 24 Dec 2011 08:30 PM PST





கடலூர் : 
 
         குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

                கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 
 
               தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது. 
 
              குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 
 
                 கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம். சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை. முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.
 
                பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும்.  நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். 
 
               கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment