
புதுடில்லி: பார்லிமென்ட் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், ஐ பேட் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, லோக்சபா செயலகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக லோக்சபா பொதுச் செயலர் விஸ்வநாதன் கூறியதாவது: பேப்பர் வடிவில் ஆவணங்களை பாதுகாப்பது மிகவும் சிரமம். அதுவே, டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமிப்பது, பயன்படுத்துவது மிக எளிது. அதன்படி, லோக்சபா நடவடிக்கைகளில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கும் வகையில், ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக, லோக்சபா நடவடிக்கை குறித்த விவரங்களை, ...


No comments:
Post a Comment