
சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக, 25 ஆயிரம் கோடி நிதியுதவி, கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய் வழங்கும்படி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, கடந்த ஜூன் மாதம் முதல், பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, மாதம் 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டர் ஒதுக்கப்பட்டது. ஜூன் மாதத்துக்குப் பிறகு, மாதம், 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டர் தான் ஒதுக்கப்படுகிறது. எனது தலைமையிலான அ.தி.மு.க., அரசு, மே மாதம் தான் பதவியேற்றது. ...


No comments:
Post a Comment