
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "அணை பலவீனமாக இருப்பதால், இனியும் புதிய அணை கட்ட தாமதிக்கக் கூடாது' என, கேரள எம்.பி.,க்களும், "இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும்போது, தேவையற்ற வதந்திகளை பரப்பி, இரு மாநில மக்களுக்கு மத்தியில் நிலவும், சுமுக உறவை கெடுக்கக் கூடாது' என, தமிழக எம்.பி.,க்களும் வாதிட்டனர். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று, தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்கள் பலரும், தங்களின் வாதங்களை கடுமையாக பதிவு செய்தனர். ...


No comments:
Post a Comment