
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் நேற்று மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எஸ்ஸார் குரூப் நிறுவனங்களின் புரமோட்டர்களான, பிரபல தொழிலதிபர் ரவி ரூயா, அன்ஷூமன் ரூயா உட்பட ஐந்து பேர் மீது இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எஸ்ஸார் கம்பெனி, "2ஜி' லைசென்ஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து, இதன் துணை நிறுவனமான லூப் கம்பெனியும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றது. சட்டப்படி, "2ஜி' லைசென்ஸ் பெற்ற கம்பெனி, மீண்டும் லைசென்ஸ் பெற அனுமதி கிடையாது. இந்நிலையில், எஸ்ஸார் மற்றும் லூப் கம்பெனி, ஸ்பெக்ட்ரம் ...


No comments:
Post a Comment