
படகில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பயணித்ததே பழவேற்காடு படகு விபத்து சம்பவத்தில் உயிர் சேதத்திற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ளது பழவேற்காடு ஏரி. பழவேற்காடு, லைட்அவுஸ்குப்பம், கூனங்குப்பம், வைரவன்குப்பம், பள்ளிகுப்பம், அரங்கன்குப்பம் உள்ளிட்ட, 52 மீனவ கிராமங்கள் இங்கு உள்ளன. சிறந்த சுற்றுலா இடமாகத் திகழும் இங்கு, பறவைகள் சரணாலயம், படகு, கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் இயற்கையாக உள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பலர் வந்து செல்கின்றனர். ...


No comments:
Post a Comment