கடலூர் மாவட்ட செய்திகள் |
- கடலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம்
- நெய்வேலி என்.எல்.சி பொறியாளருக்கு இலக்கிய மாமணி பட்டம்
- காட்டுமன்னார்கோவில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை இயக்குநருக்கு தேசிய விருது
| கடலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம் Posted: 17 Dec 2011 02:45 AM PST கடலூர்: போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார். புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ.1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம் வழங்கப்படும். தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிக்கும் அதிகாரிகளின் செல்போன் எண்கள்: மாவட்ட விநியோக அலுவலர் 9445000209. வட்ட வழங்கல் அலுவலர்கள்: கடலூர் 9005000210. சிதம்பரம்: 9445000211. காட்டுமன்னார்கோயில் 9445000212. திட்டக்குடி 9445000214. விருத்தாசலம் 9445000213. பண்ருட்டி 9445000215. குறிஞ்சிப்பாடி 9445796405. |
| நெய்வேலி என்.எல்.சி பொறியாளருக்கு இலக்கிய மாமணி பட்டம் Posted: 17 Dec 2011 02:42 AM PST நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் எஸ்.எம்.கார்த்திகேயனுக்கு புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் இலக்கிய மாமணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து பாரதியின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தின் அண்மையில் நடத்தின. இவ்விழாவில் பாரதியாருக்கு பாமாலை சூட்டியதோடு, பாரதி பற்றிய நூல் வெளியீடு மற்றும் உரையரங்கம், பாட்டரங்கம் ஆகியவையும் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ் இலக்கியப் பணி ஆற்றிவரும் நெய்வேலி உலகத் தமிழ்செம்மொழிப் பேரவையின் பொதுச்செயலரும், என்எல்சி பொறியாளருமான எஸ்.எம்.கார்த்திகேயனுக்கு இலக்கிய மாமணி எனும் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்மாமணி மன்னர்மன்னன், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் பாரதி, புதுச்சேரி தமிழ்சங்கத் தலைவர் வி.முத்து, தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாரதிசுகுமாரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |
| காட்டுமன்னார்கோவில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை இயக்குநருக்கு தேசிய விருது Posted: 17 Dec 2011 02:39 AM PST சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியம், ம.கொத்தங்குடியில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வரும் அதன் இயக்குநர் கே.குணபாலனுக்கு சிறந்த சமூக சேவைக்காக 2011-ம் ஆண்டுக்கான தேசிய விருதை இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனம் வழங்கி கெüரவித்துள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பெங்களூர் என்.ஐ.சி. கல்லூரி இயக்குநர் சாம்சன் இவ்விருதை வழங்கினார். |
| You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment