
புதுடில்லி:தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கவும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும், ஒற்றுமையுடன் வலியுறுத்துவதற்கு, கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை, தமிழக எம்.பி.,க்கள் தவறவிட்டுள்ளனர். கோரிக்கைகள் குறித்து பேச வாருங்கள் என, ரயில்வே அமைச்சர் அழைப்பு விடுத்தும், தமிழக நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு எம்.பி.,யும் தத்தமது தொகுதி வரம்பிற்குள்ளான கோரிக்கைகளையே வைத்துள்ளனர்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ...


No comments:
Post a Comment