
மாஸ்கோ: பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான்' நிறுவனர் பக்தி வேதாந்த பிரபுபாதா எழுதிய உரையான "பகவத் கீதை - உள்ளது உள்ளபடி' என்ற பிரசுரம், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக இருப்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ள, ஹிட்லரின் மெயின் கேம்ப், ஜெகோவா சாட்சியங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 57 புத்தகங்களுடன், பகவத் கீதையையும் சேர்க்க வேண்டும் எனவும் ...


No comments:
Post a Comment